தமிழக செய்திகள்

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

மேலும் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி சேலத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சுந்தரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கினை வாபஸ் பெறுவதாக சுந்தரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுவை, சுந்தரம் வாபஸ் பெறுவதாக கூறியதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்