தமிழக செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் தடை உத்தரவு அமல்

வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (9-ந்தேதி) காலை முதல் 2 மாத காலம் தடை உத்தரவு அமலில் இருக்கும்.

மேலும் தடை உத்தரவு அமலில் உள்ள நாட்களில் இன்று (9-ந்தேதி) முதல் 15-ந்தேதி வரை மற்றும் அக்டோபர் 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பிறப்பித்துள்ளார்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்