தமிழக செய்திகள்

பாளையங்கோட்டையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பாளையங்கோட்டை பெருமாள்புரம் தென்றல்நகர் பகுதி மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் சங்கீதா ராதாசங்கர், அம்பிகா, முத்துசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி ஜெபா கார்டன் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை பெருமாள்புரம், ஜெபாகார்டன் அருகில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி வீடுகளுக்கு மகிழ்ச்சிநகர் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து எல்.கே.எஸ். நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பம்பிங் செய்யும் மெயின் குழாயில் இருந்து நேரடியாக குடிநீர் வழங்க இருக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். கனரா வங்கி காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் முருகன், மாநகராட்சி உதவி ஆணையாளர் காளிமுத்து, மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு