தமிழக செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில்பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே புகார் அளித்த 3 மனுதாரர்கள் மீண்டும் புகார் மனு கொடுத்தனர். அதே போன்று புதிதாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 36 பேரும் மனு கொடுத்தனர். நேற்று ஒரே நாளில் மொத்தம் 39 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்