தமிழக செய்திகள்

செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பந்தலூர் காலனியில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தினத்தந்தி

பந்தலூர்

பந்தலூர் அருகே காலனி, அம்பேத்கர் நகர், அண்ணா நகர் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் காலனி குடியிருப்புகளை ஒட்டி தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்த கோரி கலெக்டர் அருணாவிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். தொடர்ந்து அந்த பகுதியை ஆய்வு செய்யுமாறு வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா ஆய்வு செய்தார். அவர் இன்று (புதன்கிழமை) ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் இதுதொடர்பாக நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று மக்களிடம் தெரிவித்தார். ஆய்வின் போது தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். 

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை