தமிழக செய்திகள்

செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பாளையங்கோட்டையில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தினத்தந்தி

பாளையங்கோட்டை சாந்திநகர் 11-வது தெருவில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேறு இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்க கோரியும் அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து அந்த பகுதி மக்கள் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது