தமிழக செய்திகள்

புதுச்சேரி சிறுமி கொலை: கைதானவர் தூக்குப்போட்டு தற்கொலை

புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (வயது 57), கருணாஸ் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், புதுச்சேரி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட விவேகானந்தன் சிறையில் உள்ள கழிவறையில் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த சிறைக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விவேகானந்தனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு