தமிழக செய்திகள்

புதுக்கோட்டை: மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் வெடிகுண்டு...!

புதுக்கோட்டை மீமிசல் மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் வெடிகுண்டு சிக்கியது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலில் வலையை விரித்துவிட்டு வந்த மீனவர்கள், வலையை இழுத்து பார்த்த போது, வலைக்குள் சுமார் 2 அடி நீள இரும்பு பொருள் ஒன்று இருந்தது. அதனை கரைக்கு கொண்டு வந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலேர பாதுகாப்பு குழும போலீசார் அந்த பொருளை சோதனையிட்ட போது அது ராக்கெட் வெடிகுண்டு என்பது தெரியவந்தது. அதில் 51 mm M (ILLG) என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ராக்கெட் வெடிகுண்டு ராணுவம் மற்றும் கடற்படையில் பயன்படுத்தப்படும் என்று தெரியவந்தது.

மீனவர் வலையில் சிக்கிய ராக்கெட் வெடிகுண்டை மீட்டு கடலோர பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு