வாடிப்பட்டி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் ராமராஜ். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 25). இவர் ஆனையூரில் மருந்து கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த மாதம் இவருக்கு திவ்யா(21) என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில் கார்த்திகேயன் நேற்று ஆனையூரிலிருந்து நிலக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். சமயநல்லூர் அருகே கட்டபுளிநகர் பகுதியில் சென்றபோது திடீரென்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி, சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.