தமிழக செய்திகள்

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை - மக்கள் மகிழ்ச்சி

வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னை,

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் வலுப்பெற்றுள்ளதால், இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்தது.

மேலும் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் முன்னதாகவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் தற்போது சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், தியாகராயநகர், கிண்டி, எழும்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்