தமிழக செய்திகள்

ராஜராஜ சோழன் பிறந்தநாள் அரசு விழா: ஜி.கே.வாசன் வரவேற்பு

ராஜராஜ சோழன் பிறந்தநாள் அரசு விழா: ஜி.கே.வாசன் வரவேற்பு.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு, தஞ்சாவூர் பெரியகோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளான சதய விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்ததை த.மா.கா சார்பில் வரவேற்கிறோம்.

ராஜராஜ சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ற ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட மக்களின் நீண்ட கால எண்ணம் நிறைவேறும் வகையில் தமிழக அரசின் அறிவிப்பு அமைந்துள்ளது. இரண்டு நாள் நடைபெறும் சதய விழா கோலாகலமாக, சிறப்புடன் நடைபெற்று மன்னர் ராஜராஜ சோழனுக்கு புகழ் சேர்த்து, தஞ்சை மண்ணுக்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்