தமிழக செய்திகள்

ராமேசுவரம்-செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் - இன்று முதல் இயக்கப்படுகிறது

ராமேசுவரம்-செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது

தென் மத்திய ரெயில்வே சார்பில் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாதில் இருந்து ராமேசுவரத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்தில், வருகிற 6-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படும். இதில், செகந்திராபாத்-ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வ.எண்.07695) இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10.30 மணிக்கு ராமநாதபுரம் வந்தடையும். மறுமார்க்கத்தில் ராமநாதபுரம் - செகந்திராபாத் சிறப்பு ரெயில் (வ.எண்.07696) ராமநாதபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். ரெயில்கள் நளகொண்டா, மிரியால்குடா, சட்டெனப்பள்ளி, குண்டூர், தெனாலி, பாபட்லா, கவளி, நெல்லூர், கூடூர், சென்னை எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் 3 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். தற்போது பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் மேற்கண்ட ரெயில்கள் ராமேசுவரத்துக்கு பதிலாக ராமநாதபுரம் வரை மட்டும் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு