தமிழக செய்திகள்

இந்திராநகரில் பகுதிநேர ரேஷன்கடை

நாமக்கல் இந்திராநகரில் பகுதிநேர ரேஷன்கடையை ராஜேஸ்குமார் எம்.பி. திறந்து தொடங்கி வைத்தார்.

நாமக்கல் - திருச்சி சாலையில் இந்திரா நகர் உள்ளது. இங்கு ரேஷன்கடை இல்லாததால் இப்பகுதி மக்கள் வேறு பகுதிக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வந்தனர். எனவே தங்கள் பகுதியிலேயே ரேஷன்கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட வழங்கல்துறை சார்பில் இந்திரா நகரில் புதிதாக ரேஷன்கடை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் கலாநிதி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய ரேஷன்கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு ரேஷன்கடைகள் மூலம் தரமான பொருட்களை வழங்கி வருவதாக கூறினார்.

முன்னதாக மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் ராஜேஸ்குமார் எம்.பி.க்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்