தமிழக செய்திகள்

ஓசூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொலை

ஓசூர் அருகே உள்ள தளி பெல்லூர் கிராமத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியது.

தினத்தந்தி

ஒசூர்,

ஓசூர் அருகே உள்ள தளி பெல்லூர் கிராமத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியது. நேற்று இரவு இனோவா காரில் வந்த 3 பேர் கொண்ட ரவுடிகள் கும்பல், வீட்டில் இருந்த ரியல் எஸ்டேட் அதிபர் லோகேஷை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த லோகேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, ரவுடிகள் தலைமைறைவாகியுள்ளனர்.

லோகேஷ் மனைவி உள்பட குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொழில் அதிபர் லோகேஷிடம் ரவுடிகள் கும்பல் ரூ.5 லட்சம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. கஜா, எதுபூசன் ரெட்டி உள்ளிட்ட சிலர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு