தமிழக செய்திகள்

நிலக்கோட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பேனர்கள் அகற்றம்

நிலக்கோட்டையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.

நிலக்கோட்டையில், அணைப்பட்டி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதேபோல் பேனர்களை வைத்து சிலர் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனை அகற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் அறிவுறுத்தினார். இதனையடுத்து வியாபாரிகள், தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றினர். அந்த சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர்களும் அகற்றப்பட்டது.

மேலும் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களை அதன் உரிமையாளர்களே எடுத்து சென்றனர். நிலக்கோட்டை-அணைப்பட்டி சாலையில் நிரந்தரமாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு