தமிழக செய்திகள்

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு: பிரதமர் மோடிக்கு தமிழக பா.ஜ.க. நன்றி

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய தொகுப்பில் இடஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதிகாத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க. நன்றி தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கட்சிகளின் கூட்டணி ஆட்சிகள் செய்ய மறந்த அல்லது செய்ய மறுத்த இடஒதுக்கீட்டை, சுப்ரீம் கோர்ட்டின் இசைவுடன் மத்திய தொகுப்பில் இடஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதிகாத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.

இந்திய மக்கள் போற்றிக் கொண்டாடும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முத்தாய்ப்பான முடிவினை வெளியிட்டு பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் தீபஒளி ஏற்றி வைத்த பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பிலும், பா.ஜ.க. சார்பிலும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்