தமிழக செய்திகள்

கொளப்பாக்கத்தில் ரூ.14 லட்சத்தில் சாலை

கொளப்பாக்கத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம் ஊராட்சிக்குட்பட்ட கொளப்பாக்கம் நாராயணன் நகரில் உள்ள ஜாஸ்மின் தெருவில் செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலர் கஜா என்கிற கஜேந்திரன் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ஸ்ரீ சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் நேதாஜி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலருமான ரத்தினமங்கலம் எம்.கஜா என்கிற கஜேந்திரன் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதில் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது