தமிழக செய்திகள்

ரூ.6 லட்சம் மோசடி; வாலிபர் கைது

தஞ்சை அருகே வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

வல்லம்;

தஞ்சை அருகே வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

வெளிநாட்டு வேலை

தஞ்சை அருகே வல்லம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் கவுதமன். கவுதமனை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்ப முருகன் முயற்சி செய்து வந்தார். இந்தநிலையில் தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்த கண்ணன் மகன் அருணுக்கும் (வயது30), கவுதமனுக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.கவுதமன் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வதை அருண் அறிந்தார். இதனால் கவுதமனிடம் அருண் பேசி அவரை(கவுதமனை) வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்க ரூ.6 லட்சத்தை அருண் பெற்றதாக கூறப்படுகிறது.

கைது

ஆனால் கவுதமனை ஒரு ஆண்டு கடந்த பிறகும் அருண் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவில்லை. மேலும் அருண் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்ல என கூறப்படுகிறது.இதுகுறித்து கவுதமனின் தந்தை முருகன் வல்லம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்