தமிழக செய்திகள்

விருதுநகர்: கோவில் திருவிழாவின் போது போலீசார் மீது தாக்குதல் - 2 வாலிபர்கள் கைது...!

விருதுநகர் அருகே கோவில் திருவிழாவின் போது போலீசாரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

வத்திராயிருப்பு:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் எரக்கம்மாள் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருவிழா பாதுகாப்பு பணிக்காக வத்திராயிருப்பு போலீசார் கண்ணன் (வயது 35) அங்கு சென்றிருந்தார்.

நேற்று இரவு அவர் பாதுகாப்பு பணியில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த திருப்பதிராஜா (26), அருண்குமார் (26) ஆகியோர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி வந்தனர்.

இதை பார்த்த போலீசார் கண்ணன், அவர்களை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.

ஆனால் போதையில் இருந்த 2 பேரும் அதனை கண்டுகொள்ளாமல் தகாத வார்த்தைகளால் பேசி போலீசார் கண்ணனை தாக்கி உள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கண்ணன் வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருப்பதிராஜா, அருண் குமாரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்