சென்னை,
காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளன. இது தொடர்பாக, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் 6-10-2021 மற்றும் 9-10-2021 ஆகிய நாட்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண மற்றும் தற்செயல் தேர்தல் நடைமுறைகள் நேற்றுடன் முடிவடைவதால் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் முடிவுக்கு வருகிறது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் அறிவித்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்த பகுதிகளில் அரசு நலத்திட்டங்களை இனி மேற்கொள்ளலாம்.