தமிழக செய்திகள்

நீட் தேர்வுக்கான பாடப் புத்தகங்கள் விற்பனை - அதிர்ச்சியில் ஆசிரியர்கள்

அரசு பள்ளி மாணவர்களுக்காக அச்சிடப்பட்ட நீட் தேர்வு புத்தகங்கள் விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

நீட் தேர்வுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் கீழ் இயங்கக்கூடிய தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் சேவை நிறுவனம், நீட் தேர்வுக்கான பாடப்புத்தகங்களை விற்பனை செய்து வருகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்காக அச்சிடப்பட்ட நீட் தேர்வு புத்தகங்கள் விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒரு செட் 3 ஆயிரத்து 500 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள பாடநூல் கழக தலைமை அலுவலகத்திலேயே இந்த புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்த அறிவிப்பு பலகையும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்