தமிழக செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

பொங்கல் விழா

நெல்லை அருகே உள்ள அழகியபாண்டியபுரம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் ஊரக மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் கரும்பு வழங்கி பொங்கல் வாழ்த்து கூறினார்.

இதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், கயிறு இழுத்தல் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டி, உறியடித்தல் போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

சிலம்பாட்டம்

விழாவில் மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் கிராமிய நடனம், சிலம்பாட்டம் என பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், கிராம பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் அனிதா, மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன், துணைத்தலைவர் கலைச்செல்வி, மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொன்ராஜ், முத்துகிருஷ்ணன், அழகியபாண்டியபுரம் பஞ்சாயத்து தலைவர் வேலம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டர் அலுவலகத்தில்...

இதைப்போல் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு பொங்கல் வாழ்த்து கூறினார். கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கோலம் போட்டு, பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். இதில் ஆண்கள் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டை அணிந்து வந்தனர். பெண்கள் குழுவாக சேலை கட்டி இருந்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்