சென்னை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய உதவியாளர் சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.
அதில் நவம்பர் 8, 2016-க்குப் பிறகு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்தி ஒரு ரிசார்ட் இரண்டு ஷாப்பிங் மால்கள், ஒரு மென்பொருள் நிறுவனம், ஒரு சர்க்கரை ஆலை, ஒரு காகித ஆலை மற்றும் 50 காற்றாலைகளை சசிகலா வாங்கினார். இவைகள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ளவை ஆகும் என கூறி உள்ளது.