தமிழக செய்திகள்

சசிகலா விரைவில் அ.தி.மு.க.வை கைப்பற்றுவார் - தங்க தமிழ்செல்வன் பேட்டி

சசிகலா விரைவில் அ.தி.மு.க.வை கைப்பற்றுவார் என்று தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் கூறினார்.

போடி,

தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன் மார்க்கெட் மற்றும் அம்மா உணவகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் திட்ட பணிகளை தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வை வழிநடத்த தெரியாமல் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தத்தளித்து வருகின்றனர். இவர்கள் தங்களது சண்டை சச்சரவுகளை தீர்த்து கொள்ளத்தான் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் கடந்த 10 ஆண்டு காலமாக போடி தொகுதிக்கு செய்யாத திட்டங்களை தற்போது பொதுமக்கள் என்னிடம் கோரிக்கையாக வைக்கின்றனர். இதனால் நான் நேரில் சென்று அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறேன். நான் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் கூறுவதற்கு தகுதி இல்லை.

இன்றைக்கு சசிகலா, தனிப்பட்ட குடும்பம் அ.தி.மு.க.வை கைப்பற்ற முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். ஆனால் விரைவில் சசிகலா அ.தி.மு.க.வை கைப்பற்றுவார்.

இவ்வாறு அவர் கூறினார்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்