தமிழக செய்திகள்

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணை 5-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணை 5-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மதுரை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு போலீஸ்நிலையத்தில் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்த இரட்டைக்கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சாத்தான்குளத்தில் அப்போதைய இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் 9 பேர் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி நாகலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் கைதான போலீசார் 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால் சாட்சிகள் யாரும் ஆஜராகாததால், இந்த வழக்கு விசாரணை வருகிற 5-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு