தமிழக செய்திகள்

சீமான் டுவிட்டர் கணக்கு முடக்கம் - கவிஞர் வைரமுத்து கண்டனம்

சீமானின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்பட மேலும் சிலரின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டன. இதற்கு கவிஞர் வைரமுத்துகண்டனம் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

"வன்மையாகக் கண்டிக்கிறேன். சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா? வெயிலுக்கு எதிராகக் குடைபிடித்தால் காணாமற் போகுமோ கதிரவன்?. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்; கை கால்களைக் கட்டாதீர்கள். கருத்துரிமை இன்னும் உயிரோடு இருப்பதாக நம்புகிறவர்களுள் நானும் ஒருவன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்