தமிழக செய்திகள்

மானாமதுரை சந்தையில்-ரசாயனம் கலந்த 200 கிலோ மீன்கள் பறிமுதல்

மானாமதுரை சந்தையில் ரசாயனம் கலந்த 200 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மானாமதுரை

மானாமதுரை பகுதியில் உள்ள சந்தை பகுதியில் விற்கப்படும் மீன்களில் பார்மலின் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக மீன் வளத்துறை இன்ஸ்பெக்டர் சோபியாவிற்கு கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சரவணன் தலைமையிலான குழுவினர் மீன் சந்தைக்கு சென்றனர். அங்கு வெளிமாவட்டங்களில் இருந்து லாரியில் கொண்டு வந்து விற்பனைக்கு வைக்கப்பட்ட மீன்களை ஆய்வு செய்தனர். இதில் சுமார் 200 கிலோ வரை மீன்களில் பார்மலின் ரசாயனம் கலந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை விற்பனைக்கு வைத்திருந்த மீன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி 3 கடை வியாபாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.

SCROLL FOR NEXT