தமிழக செய்திகள்

மாநில, தேசிய பயிற்றுனர்களாக தேர்வான சாரண, சாரணிய இயக்க பொறுப்பாளர்களுக்கு பாராட்டு

தூத்துக்குடியில் மாநில, தேசிய பயிற்றுனர்களாக தேர்வான சாரண, சாரணிய இயக்க பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் மூலம் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சாரணிய பயிற்சி ஆணையர் ஆ.ஜெயா சண்முகம், ஆசிரியைகள் ரா.ச.பிரியங்கா, த.மணிமேகலை மற்றும் கோல்டன் நர்சரி பிரைமரி பள்ளி ஆசிரியை மு.உமா மகேசுவரி ஆகியோர் மாநில, தேசிய பயிற்றுனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தமிழ்நாடு பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் மாநில தலைவரும் மற்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

இதனை தொடர்ந்து பாராட்டு சான்றிதழ் பெற்ற பொறுப்பாசிரியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி, தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்க மாவட்ட செயலாளர் செ.எட்வர்ட் ஜான்சன்பால், மாவட்ட ஆணையர் பி.சரவணன், மாவட்ட அமைப்பு ஆணையர்கள் என்.வள்ளியம்மாள், அல்பர்ட் தினேஷ் சாமுவேல், மாவட்ட பயிற்சி ஆணையர் வி.சிவக்குமார் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பாராட்டினர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை