தமிழக செய்திகள்

சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது- வாழ்க்கை வரலாறு

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உடல் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. #KanchiSeerDied #Kanchisankaracharyar #Jayendrar #JayendraSaraswathi

சென்னை

காஞ்சீபுரத்தில் உலகப் புகழ் பெற்ற காஞ்சி சங்கர மடம் உள்ளது. காஞ்சி சங்கரமடத்தின் 69-வது பீடாதிபதியாக ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்தார். கடந்த 1994-ம் ஆண்டு மகா பெரியவர் முக்தி அடைந்த பிறகு மடாதிபதி பொறுப் பேற்று செயல்பட்டு வந்தார்.

காஞ்சீபுரத்தில் உள்ள ஆலயங்களுக்கு வரும் பக்தர்கள் காஞ்சி சங்கர மடத்திற்கும் சென்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமியிடம் ஆசி பெற தவறுவதில்லை. காஞ்சி மடத்தில் உள்ள தனது அறையில் அமர்ந்து அவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.

சில மாதங்களாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை 8.10 மணிக்கு அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஏ.பி.சி.டி. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அப்போது எதிர் பாராத விதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

டாக்டர்கள் கொண்ட குழு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமியை காப்பாற்ற தீவிரமாக போராடியது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. 9.10 மணிக்கு காஞ்சி சங்கராச் சாரியார் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைந்தார்.

9.15 மணிக்கு ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சி மடத்திற்கு எடுத்து வரப்பட்டது. 9.20-க்கு காஞ்சி மடத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு மட நிர்வாகிகளால் அஞ்சலிக்காக தயார் செய்யப்பட்டது.

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு புதிய ஆடை அணிவிக்கப்பட்டு, மாலை கள் சாத்தி அலங்கரிக்கப்பட்டது. பிறகு மடத்தில் உள்ள மண்டபத்தில் உடல் வைக்கப்பட்டது. பக்தர்கள் அங்கு சென்று ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு நாடு முழுவதும் பக்தர்கள் உள்ளனர். அவரது ஆசி பெற்ற பலர் வெளிநாடுகளில் உயர் பதவிகளில் உள்ளனர். எனவே அவரது உடல் அடக்கம் நாளை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

மடத்தில் உள்ள ஒரு இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பக்தர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக மடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜெயேந்திரரின் மறைவை தொடர்ந்து காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் நடை அடைக்கப்பட்டது.

முக்தி அடைந்துள்ள ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வயது 83.

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி 1935ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். ஜெயேந்திர சரஸ்வதியின் இயற்பெயர் சுப்பிரமணியம் மகாதேவ் ஜயர். இவர் தனது 19 வயதில் 1954ம் ஆண்டு மார்ச் 22-இல் காஞ்சி சங்கரமடத்தின் இளைய பீடாதிபதியானார். 1994ல் காஞ்சி மடத்தின் 69-வது பீடாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். புரோகிதத் தன்மை, ஆழ்ந்த புலமையால் இந்து சமயத்தினரிடையே செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தார்.

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பின்னர்-2005ம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயேந்திரரை புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு விடுவித்தது.

#Kanchisankaracharyar #Jayendrar #JayendraSaraswathi

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்