தமிழக செய்திகள்

கடலூரில் அதிர்ச்சி; திடீரென இடிந்து விழுந்த பள்ளி கட்டிடம்

கடலூரில் பள்ளி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

கடலூர்,

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த சூழலில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மீண்டும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.

எனினும், தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து பல்வேறு நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் தொடர்ச்சியாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. நேற்று வரை பயன்பாட்டில் இருந்த பள்ளி கட்டிடம் இன்று காலை இடிந்து விழுந்தது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு