தமிழக செய்திகள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிர்ச்சி சம்பவம்: பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஒரு தனியார் தியேட்டர் வளாகத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்றவர்கள் அருகில் சென்று பார்த்ததில் பச்சிளம் குழந்தை நெருப்பில் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனிடையே குழந்தையின் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைக்கப்பட்டதையடுத்து, அது பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை என்பது தெரிய வந்தது.

இந்த குழந்தை யாருடையது? எதனால் தீயீல் இட்டு கொளுத்தினார்கள்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பச்சிளம் குழந்தையை நெருப்பில் இட்டு எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்