தமிழக செய்திகள்

டிரைவருக்கு அரிவாள் வெட்டு

சிங்கப்பெருமாள்கோவில் அருகே டிரைவரை அரிவாள் வெட்டிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 25). டிரைவர். இவர் நேற்று சிங்கப்பெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர் அரசு பள்ளி அருகே செல்லும்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து வீச்சரிவாளால் தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த பிரவீன்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக பிரவீன் குமாரை வெட்டினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்