தமிழக செய்திகள்

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து: கனல் கண்ணன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கைதான சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சென்னை,

சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணி கூட்டத்தில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், பெரியார் பற்றி அவதூறாக பேசி இருந்தார். இதையடுத்து கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கனல் கண்ணனை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர் தலைமறைவானார். சென்னை ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடியானது.

இந்தநிலையில் புதுவையில் வைத்து கனல் கண்ணனை போலீசார் இன்று கைது செய்தனர். அவரை போலீசார் தற்போது எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்