தமிழக செய்திகள்

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு குழு அமைப்பு

தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தனியார் பஸ் கட்டணம் அதிகரிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.

சென்னை,

தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் தனியார் பஸ் கட்டணம் அதிகரிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, தனியார் ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;

ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு (01.10.2025 முதல் 05.10.2025 வரை) பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் அதனைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டு அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்குப்புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்