தமிழக செய்திகள்

ஊட்டியில் நாளை முதல் சிறப்பு மலை ரெயில் இயக்கம்

ஊட்டியில் நாளை முதல் சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டுகிறது.

ஊட்டி,

தொடர் விடுமுறையையொட்டி ஊட்டி-குன்னூர் இடையே சிறப்பு மலை ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டியை வந்தடைகிறது. ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் செல்லும். முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் உள்ளன.

இதேபோல் ஊட்டி-கேத்தி இடையே 3 ஜாய் ரைடு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. முதல் சுற்று ஊட்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி செல்லும். அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டி வந்தடைகிறது. இரண்டாவது சுற்று ஊட்டியில் இருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு கேத்தியை சென்றடையும். அங்கிருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு ஊட்டி வந்தடையும்.

மூன்றாம் சுற்று ஊட்டியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி சென்றடையும். அங்கிருந்து 4 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ஊட்டி வந்தடையும். 2 சிறப்பு மலை ரெயில்களும் நாளை, நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் 25-ந் தேதி ஆகிய 3 நாட்கள் இயக்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்