கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கோவை, திருப்பூர் வழியாக திருவனந்தபுரம் - சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம் - சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

ஹோலி பண்டிகையை முன்னிட்டு திருவனந்தபுரம்-சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருவனந்தபுரத்தில் இருந்து வருகிற 13, 20 ஆகிய தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06081), கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் மதியம் 2.15 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.

மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து வருகிற 16, 23 ஆகிய தேதிகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு ரெயில் (06082), மேற்கண்ட வழித்தடம் வழியாக புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read:15 வயது சிறுமியை தாக்கிய ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலம் கைது