15 வயது சிறுமியை தாக்கிய ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலம் கைது

சிறுமியை தாக்கிய இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
15 வயது சிறுமியை தாக்கிய ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலம் கைது
Published on

சென்னை,

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (25 வயது). இவர், காசிமேடு மீனவன் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த 15 வயது சிறுமியின் மீது பைக் மோதியது.

Also Read
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் - பக்தர்கள் 'செல்பி' எடுக்க சூழ்ந்ததால் பரபரப்பு
15 வயது சிறுமியை தாக்கிய ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலம் கைது

இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த கவின், 15 வயது சிறுமி என்றுகூட பாராமல் சிறுமியின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். இதனை தட்டிக்கேட்டு வந்த சிறுமியின் தந்தையையும் கவின் தாக்கினார். இதனால் சிறுமியின் உறவினர்களான பெண்கள் பலரும் சேர்ந்து கவினை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

Also Read
தாண்டாக்கவுண்டனூர் மாரியம்மன் கோவில் பூச்சாற்று விழா: யாரையும் ஒதுக்கி வைத்து நடத்தக் கூடாது - ராமதாஸ்
15 வயது சிறுமியை தாக்கிய ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலம் கைது

இதுபற்றி தகவல் அறிந்து வந்த காசிமேடு போலீசார் கவினை மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். கவினை தாக்கியதற்காக சிறுமியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறுமியை தாக்கியதாக கவின் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read
வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
15 வயது சிறுமியை தாக்கிய ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலம் கைது
X

Daily Thanthi
www.dailythanthi.com