தமிழக செய்திகள்

கிணத்துக்கடவு, வால்பாறையில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கிணத்துக்கடவு, வால்பாறையில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

கிணத்துக்கடவு

கோவை-பொள்ளாச்சி சாலையில் சிவலோகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி சிவலோகநாதருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், கரும்புச்சாறு எலுமிச்சைச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவலோகநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் அமைந்துள்ள காசி விஸ்வநாதருக்கும், கோவில்பாளையம் காளியண்ணன்புதூரில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலிலும் சனிபிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றன.

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டனர். இதில் சிவன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு பொங்கல் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபேல சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்