தமிழக செய்திகள்

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையப்பசுவாமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையப்பசுவாமி கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மார்க்கண்டேயர் ஆலிங்கனம் அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். இதேபோல் பரமசிவன் மலைக்கோவில், சுப்பிரமணியசுவாமி கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பிச்சாங்கரை கீழச்சொக்கநாதர் கோவில், மேலச்சொக்கநாதர் கோவில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், சத்திரம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு