தமிழக செய்திகள்

கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள்

கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டியில், 1,200 மாணவிகள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டியில், 1,200 மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளையாட்டு போட்டிகள்

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவில் மாணவிகளுக்கான குழு விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் துரை போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் வரவேற்றார்.

இதில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் என, 10 சரகங்களைச் சேர்ந்த, 1,200 மாணவிகள், 80 அணிகளாக கலந்து கொண்டனர். இவர்களுக்கு 14, 17 மற்றும், 19 வயது பிரிவுகளில், கோ-கோ, கால்பந்து, கைப்பந்து ஆகிய குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

மாநில அளவிலான போட்டி

இதில், முதலிடம் பெறும் அணிகள், புதுக்கோட்டையில் ஜூனியர் அணியும், தேனியில் சீனியர் அணியும், கோவையில் சூப்பர் சீனியர் அணியும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு