சுப நாட்களில், மக்கள் விரும்பும் சுபயோக சுபதினங்கள் - அரசு விடுமுறை நாட்களாயினும், அன்றைய தினத்தில் பத்திரப்பதிவு செய்தால், சொத்துப் பெருகும் - வளம் செழிக்கும் என்று நம்பும் மூடநம்பிக்கையாளர்களை ஊக்குவிப்பதுபோல், அன்று கூடுதல் கட்டணம் செலுத்தி, பத்திரப்பதிவு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசே அறிவித்திருப்பது அரசமைப்புச் சட்ட விரோதச் செயல்.
மற்ற துறைகளுக்கு விடுமுறை என்றால், அன்றைய தினம் பத்திரப்பதிவு அலுவலகத்தைத் திறந்து பதிவு செய்தல் சட்ட முரண்பாடு அல்லவா?. இதை அனுமதித்தால், இனி ஜோதிடமே கூட ஆஸ்தான ஜோதிடமாக ஆகிவிடும். இதனை அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முனையும் அத்தனைப் பேரும், பகுத்தறிவாளர்களும், மதச் சார்பற்றோருடன் இணைந்து கண்டித்து, இதுபோன்ற திட்டங்களை தமிழக அரசை பின்வாங்கச் செய்யவேண்டும்.
இதில் சும்மா இருந்தால், முழு இந்துத்துவ சாம்ராஜ்ஜியமாகவே ஆட்சி - ஆர்.எஸ்.எஸ். சார்பு அதிகாரவர்க்கமாக ஆகிவிடக் கூடும் - எச்சரிக்கை. எதிர்ப்பு மலைபோல் உருவாகட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.