தமிழக செய்திகள்

பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி

பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகாவை தமிழக க்யூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

இலங்கையில் பிரபல டான் சுனில் ஜெனிமி பொன்சேகா, அந்நாட்டு அரசால் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தியதாக தமிழக போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த பொன்சேகா, தனது பெயர் மற்றும் அடையாளங்களை மாற்றி, இந்திய குடிமகனுக்கான ஆவணங்களையும், போலி பாஸ்போர்ட்டையும் பெற்றுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தனது அடையாளத்தை மாற்றி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

சென்னையில் கடந்த 6 மாத காலத்திற்கு மேலாக விருகம்பாக்கம், வளசரவாக்கம், ஆவடி, கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தங்கியிருக்கிறார். இதற்கிடையில் தமிழகத்தில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த பொன்சேகா, பின்னர் பெங்களூருவில் தலைமறைவானார். இதனையடுத்து பொன்சேகாவை பெங்களூருவில் வைத்து தமிழக க்யூ பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நாளை ஜெமினி பொன்சேகாவை தமிழக க்யூ பிரிவு போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது