தமிழக செய்திகள்

ஸ்ரீவைகுண்டம்கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் ஊஞ்சல் திருவிழா

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் ஊஞ்சல் திருவிழா புதன்கிழமைதொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செயத்னர்.

ஸ்ரீவைகுண்டம்,:

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவ திருவிழா நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஊஞ்சல் திருவிழா

நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் ஊஞ்சல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது.

இவ்விழாவை முன்னிட்டு கோவிலில் காலை 7 மணிக்கு விஸ்வரூபம், காலை 8 மணிக்கு திருமஞ்சனம், காலை 10 மணிக்கு நித்தியல் கோஷ்டியும் நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சாயரட்சை, மாலை 6.30 மணிக்கு சுவாமி கள்ளப்பிரான் தாயார்களுடன் பால் குறட்டில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளி ஊஞ்சல் சேர்வை நடந்தது.

சிறப்பு தீபாராதனை

இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு பக்தர்கள் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல் படித்தனர். இரவு 8.15 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 4 நாட்கள் ஊஞ்சல் திருவிழா நடைபெறுகிறது. 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு