சென்னை,
அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அனைத்து மேல்நிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அந்த சான்றிதழ்களில் உள்ள விவரங்களை சரிபார்த்து தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.
17-ந்தேதி (நாளை) முதல் 21-ந்தேதி வரையிலான நாட்களில் மட்டும் பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வினியோகிக்கப்படவேண்டும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்து அவற்றில் மாணவர்களின் பெயர், தலைப்பெழுத்து, பிறந்ததேதி, பெற்றோர், பாதுகாவலர் பெயர் ஆகியவற்றில் ஏதேனும் பிழைகள் இருப்பின், தலைமை ஆசிரியரே அந்த திருத்தத்தை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு அளித்திடவேண்டும்.
சான்றிதழ்கள் வழங்கப்படும்போது அரசின் நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.