தமிழக செய்திகள்

மாநில கால்பந்து போட்டி

விக்கிரமசிங்கபுரம் முதலியார்பட்டியில் மாநில கால்பந்து போட்டி நடைபெற்றது.

தினத்தந்தி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் முதலியார்பட்டியில் ஜெயராம் புட்பால் கிளப் சார்பில் 41-வது மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் நல்லை, மதுரை, நாகர்கோவில், தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த அணிகள் விளையாடின. இறுதி போட்டியில் கடையம், மதுரை அணிகள் மோதின. இதில் டைபிரேக்கர் முறையில் கடையம் அணி வெற்றி பெற்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித்ஆனந்த் தலைமை தாங்கினார். கால்பந்தாட்ட முன்னாள் வீரர் மனோகரன் சாமுவேல், தொழிலதிபர் மார்ட்டின், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கவுன்சிலர் கிறாஸ்இம்மாக்குலேட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற கடையம் அணிக்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. சார்பில் முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்வ ஆண்டனி முதல் பரிசுக்கான கோப்பை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை வழங்கினார். சிவந்திபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பிராங்கிளின், கனரா வங்கி மேலாளர் மைக்எவன்ஸ், இந்தியன் வங்கி மேலாளர் பிரதாப் மனுவேல்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை