தமிழக செய்திகள்

மாநில அளவிலான கராத்தே, யோகா போட்டி

சோளிங்கர் அருகே மாநில அளவிலான கராத்தே, யோகா போட்டி நடைபெற்றது.

சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சியில் ஷோபுகாய்சிட்டோரியோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான கராத்தே, சிலம்பம், யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. ஷோபுகாய்சிட்டோரியோ கராத்தே பயிற்சி பள்ளி தலைமை பயிற்சியாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். பல்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. கராத்தே, சிலம்பம், யோக தலைமை பயிற்சியாளர்கள் கார்த்தி, பிச்சைமுத்து, சரவணன், வாலாஜா வாசுதேவன், சுரேஷ், ராஜசேகர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பயிற்சியாளர் ரேவதி நன்றி கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு