தமிழக செய்திகள்

புயல் எதிரொலி - சென்னையில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

தினத்தந்தி

சென்னை,

பெஞ்சல் புயல் காரணமாக பெய்த மழையால் வியாசர்பாடி பாலம் அருகே கூவம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கபடுகின்றன. அதன் விபரம் வருமாறு;

சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் சில விரைவு ரெயில்கள் இன்று கடற்கரை ரெயில்நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன. அதன் விபரம்;

* சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் (நள்ளிரவு 12.30மணி)

* சென்ட்ரல் - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் (இரவு 11.55மணி)

* சென்ட்ரல் -திருவனந்தபுரம் ரயில் (இரவு 8 மணி)

* சென்ட்ரல் - பெங்களூரு மெயில் (இரவு 11.30மணி)

* சென்ட்ரல் - கோவை அதிவிரைவு ரயில் (இரவு 11மணி)

* சென்ட்ரல் - கோவை சேரன் எக்ஸ்பிரஸ் (இரவு 10.30மணி)

அதேபோல, சென்ட்ரலில் இருந்து பெங்களூரு, மங்களூரு, திருப்பதி மற்றும் மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருவள்ளூரில் இருந்து புறப்படும். சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆவடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்