தமிழக செய்திகள்

மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

செல் போன் பார்த்ததை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை சாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவரது மகள் அதிசியா (வயது 17). ராணிப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தற்போது விடுமுறையில் இருந்துள்ளார். இந்தநிலையில் விடுமுறையில் இருந்த தனது மகளை அழைத்துக் கொண்டு சந்தோஷ் குமார் தனது மாமியார் வீடான ஜோலார்பேட்டை அருகே பால்னங்குப்பம் பகுதியில் உள்ள ராணி வீட்டிற்கு கடந்த 26-ந் தேதி வந்துள்ளார்.

அப்போது அதிசியா நீண்ட நேரம் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். இதனை தந்தை சந்தோஷ்குமார் கண்டித்து உள்ளார். அதன் பின்னர் சந்தோஷ் குமார் தனது வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் பாட்டி ராணி கடைக்கு சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த அதிசியா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தந்தை சந்தோஷ் குமார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு