தமிழக செய்திகள்

ரெயில் முன் பாய்ந்து மாணவன் தற்கொலை: மேலும் ஒரு மாணவன் கைது

கல்லூரி மாணவரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மேலும் ஒரு கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருநின்றவூர் ரெயில் நிலையத்தில் கடந்த 28ந்தேதி மாநில கல்லூரி மாணவன் குமார், ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக, திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், மற்றொரு கல்லூரி மாணவர்கள் 8 பேர், குமாரை ராகிங் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.

இதனையடுத்து போலீசார், சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவன் மனோஜ் (வயது 18) என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். தொடர்ந்து மற்ற மாணவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு மாணவன் திருநின்றவூர் அடுத்த குருவாயல் கிராம பகுதியை சேர்ந்த ஹரிஷ் (வயது 19) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இதன்பின்னர் அவரை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து, தலைமறைவாக உள்ள 6 மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு