தமிழக செய்திகள்

தேசிய அளவிலான போட்டியில் வெற்றி:சாரணிய மாணவிகளுக்கு பாராட்டு

அரியானா மாநிலத்தில் தேசிய அளவிலான சாரண, சாரணியர் பயிற்சி முகாம் 5 நாட்கள் நடைபெற்றது. தமிழ்நாடு அணியில் தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் பாலக்கோடு கல்வி மாவட்டத்தை சேர்ந்த சாரண, சாரணியர் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சாரண, சாரணியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மாறுவேட போட்டி, பேஷன் டிரஸ் போட்டி, நாடகம், நடனங்களுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 6 பேர் பேஷன் டிரஸ் போட்டி மற்றும் நடனத்தில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்